அடுத்த வருஷத்துல இருந்தே 10 டீம்ஸ்... பிசிசிஐ புதிய முடிவு... மே மாசத்துல ஏலம் நடக்க இருக்காம்!

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் துவங்கி மே மாதம் 30ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல்லில் மேலும் 2 அணிகளை சேர்ப்பது குறித்து பிசிசிஐ தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த வருஷத்துல இருந்தே 10 டீம்ஸ்... பிசிசிஐ புதிய முடிவு... மே மாசத்துல ஏலம் நடக்க இருக்காம்!


ஏப்ரல் 9ம் தேதி துவக்கம் ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகள் நடைபெறவுள்ள இடம் உள்ளிட்டவை இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று ஆடவுள்ளன.

10ஆக ஆக்க முடிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கையை 10ஆக ஆக்கவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு 9 அணிகளாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் நேற்றைய தினம் இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விவாதித்தனர்

அடுத்த ஆண்டு 10 அணிகள் இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்படும் என்றும் இதற்கான ஏலம் வரும் மே மாதத்தில், ஐபிஎல் 2021 இடையில் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அணிகள் குறித்த இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் அந்த அணிகள் தங்களது செய்லபாடுகளை உடனடியாக துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.