சென்னையில் திமுக கிங்.. மேற்கு மண்டலத்தில் அதிமுக அமோகம்.. எந்த மண்டலத்தில் யார் டாப்? செம சர்வே

தமிழக சட்டசபை தேர்தலில் எந்த மண்டலத்தில் எந்த கட்சி வலுவாக இருக்கிறது என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி சென்னை மண்டலத்தில் திமுக மிகவும் பலமாக இருக்கிறது. சென்னை மண்டலத்தில் 18 தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக பலமாக இருப்பதை கருத்துக் கணிப்பு உறுதி செய்கிறது.

சென்னையில் திமுக கிங்.. மேற்கு மண்டலத்தில் அதிமுக அமோகம்.. எந்த மண்டலத்தில் யார் டாப்? செம சர்வே

சென்னை மண்டலம் அதாவது, 47.27 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 20.81% பேர் மட்டும்தான் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை மண்டலத்தில் ஓரளவு செல்வாக்குடன் இருக்கிறது. அந்தக் கட்சிக்கு 8.42 சதவீதம் பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சிக்கு 4.46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

வடக்கு மண்டலம் இது சென்னை நிலவரம் என்றால் வடக்கு மண்டலத்தில் உள்ள 78 தொகுதிகளில் நிலவரம் என்ன என்பது பற்றியும் புதிய தலைமுறை தனது கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடனும் கூட்டணியால் வடக்கு மண்டலத்தில் அதிமுக பலம் பெறும் என்பது பொதுவான கருத்து. ஆனால் புதிய தலைமுறை கருத்துக் கணிப்பின்படி இங்கு திமுக 42.93% ஆதரவை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 32.6 1 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. நாம் தமிழர் கட்சி 2.93 சதவீதம் மக்கள் நீதி மையம் 2.50 சதவீதம் வாக்குகளை பெறுகிறதாம்.

தெற்கே எப்படி தெற்கு மண்டலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் வருகின்றன. இங்கு திமுக கூட்டணி 35.90 சதவீதம் வாக்குகளை பெறும். அதிமுக கூட்டணி 24. 58 சதவீதம் வாக்குகளை பெறும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மக்கள் நீதி மய்யம் 6.40 சதவீதம் வாக்குகளை பெறும். நாம் தமிழர் கட்சி 7.61 சதவீதம் வாக்குகளை பெறும். இவ்வாறு அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

கொங்கு மண்டலம் மேற்கு மண்டலம், அதாவது அதிமுக பலமாக இருப்பதாக கூறப்படும் , கொங்குமண்டலம் பகுதியில் 42 தொகுதிகள் வருகின்றன. புதிய தலைமுறை கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 36.54 சதவீதம் அளவு வாக்குகளை பெறும். திமுக கூட்டணி இங்கு 28.50 சதவீதம் வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த மண்டலத்தில் தான் பிற மண்டலங்களை விட அதிக வாக்குகளை பெறும் என்று சொல்கிறது இந்த கருத்துக்கணிப்பு. அதாவது 9.26 சதவீதம் அளவுக்கு வாக்குகளை பெறும். நாம் தமிழர் கட்சி 3.44 சதவீதம் வாக்குகளை பெறும்.

மத்திய மண்டலத்தில் செம போட்டி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலங்களில் 36 தொகுதிகள் வருகின்றன. இங்கு திமுகவுக்கு, அதிமுக கடும் போட்டியை கொடுக்கிறது, அதிமுக கூட்டணிக்கு 30.5 3 சதவீதம் அளவுக்கு வாக்குகள் கிடைக்கும். திமுக கூட்டணி 34.33% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் 4 சதவீதத்துக்கும் மேலும், நாம் தமிழர் கட்சி 5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.