ராஷ்மிகாவை பார்த்து மலைத்துப்போன கார்த்தி

சுல்தான் படத்தின் தனக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவை பார்த்து மலைத்து போயுள்ளார் நடிகர் கார்த்தி

ராஷ்மிகாவை பார்த்து மலைத்துப்போன கார்த்தி

சென்னை: சுல்தான் படத்தின் தனக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவை பார்த்து மலைத்து போயுள்ளார் நடிகர் கார்த்தி

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் படம் சுல்தான்.
இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி லீடிங் ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கல் வரவேற்பை பெற்றுள்ளது.

சுல்தான் பிரஸ் மீட்
இதனிடையே இப்படத்தின் பிரஸ் மீட் மற்றும் ட்ரெயிலர் லாஞ்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா, படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ராஷ்மிகா ஜோடி
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி ராஷ்மிகாவை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாது, என்னுடைய படங்களான தீரன் மற்றும் கைதி ஒரு ரகமாக இருந்தது. அடுத்து சுல்தான் வருகிறது. சுல்தான் படத்தில் ராஷ்மிகா எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

விளையாட்டு பெண் 
ராஷ்மிகா சரியான விளையாட்டுப் பெண். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் எல்லாம் ஒரே மாதிரியான கேரக்டராக இருக்கிறது என்று மறுத்து வந்தார். ஒரு கிராமத்து கதாபாத்திரத்துக்காக அவர் காத்திருந்தார்.

இந்த படம் கிராமத்து பின்னணியை கொண்ட படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். ராஷ்மிகா நான்கு மொழிகள் பேசுகிறார். ராஷ்மிகாவுக்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். படப்பிடிப்பில் லூட்டி அடித்தபடி இருப்பார்

ஆனால், ஷாட்டுக்குள் வந்ததும், எல்லாவற்றையும் மறந்துவிட்டு கேரக்டரா மாறி சரியா வசனம் பேசி அசத்துவார். அவரது நடிப்பு மலைக்க வைத்தது. ராஷ்மிகாவுக்கு இந்திய சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது.. இவ்வாறு ராஷ்மிகா குறித்து புகழ்ந்து தள்ளினார் கார்த்தி.