நான் தடுப்பூசி போட்டுட்டேன்.. ப்ளீஸ் நீங்களும் போட்டுக்குங்க.. 'சூப்பர் ஸ்டார்' வேண்டுகோள்!

பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தான் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாகவும் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு மோசமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

நான் தடுப்பூசி போட்டுட்டேன்.. ப்ளீஸ் நீங்களும் போட்டுக்குங்க.. 'சூப்பர் ஸ்டார்' வேண்டுகோள்!

.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். மக்கள் மறுக்காமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டு, தடுப்பூசி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டேன் அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மகேஷ் பாபுவும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள மகேஷ் பாபு, நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்களும் உங்களுடைய தடுப்பூசியை ஆம் தேதி முதல் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்.. #GetVaccinated என பதிவிட்டுள்ளார்.