ஒரு மாதமாக விலை உயரவில்லை.. சென்னையில் நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் இன்று குறைந்துள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு மாதமாக விலை உயரவில்லை.. சென்னையில் நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை!


பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மாதமாக விலை உயரவில்லை இதற்கிடையே சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து பொதுமக்களை வாட்டி எடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை அதன்பின்னர் இன்று வரை ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகரிக்கவில்லை.

தேர்தல் காரணம் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடப்பதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் உலா வந்தன.நான்கு நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையில் தலா 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.77க்கும் டீசல் ரூ.86.10க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை நான்கு நாட்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கு விற்பனை செய்யப்படுகிறது