10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களா.. எலக்ட்ரீஷியன் பணிக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி!

சென்னை: தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பின்படி Apprentice (Electrician) பணியை நிரப்பிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் சார்பாக (National Apprenticeship Promotion Scheme) அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களா.. எலக்ட்ரீஷியன் பணிக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி!

இதற்கான பயிற்சிக் காலம் 23 மாதங்கள் ஆகும். இந்த பயிற்சியின் போது ரூ 6 ஆயிரம் முதல் ரூ 7 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் இப்போதே தங்களுடைய விண்ணப்பங்களை apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு ஆகும். பணியிடம் கரூரில். வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறைகளை ஆன்லைன் மூலம் பார்க்கலாம்