பிக் பாஸ் 5.. நச்சுன்னு ஒரு அப்டேட்.. தொகுத்து வழங்கப் போவது இவராமே.. பரபரக்கும் சின்னத்திரை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாக மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமலஹாசன் கடந்த 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் 5.. நச்சுன்னு ஒரு அப்டேட்.. தொகுத்து வழங்கப் போவது இவராமே.. பரபரக்கும் சின்னத்திரை!

தற்போது 4வது சீசன் முடிந்து 5வது சீசன் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் , இந்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் எனவும் வேறு ஒரு நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஆரி வின்னர் அக்டோபர் 4ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் 4, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் 100 நாட்கள் வீட்டுக்குள் இருந்து இறுதி போட்டியாளராக ஆரி, ரியோ, பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், ரம்யா பாண்டியன் ஆகியோர் இருந்தார்கள். இதில் 16 கோடி வாக்குகளுடன் ஆரி டைட்டில் வின்னரானார்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை 5வது சீசனை ஒருவேளை கமல் தொகுத்து வழங்க முன்வரவில்லை என்றால் , நடிகர் சிம்புவை வைத்து நிகழ்ச்சியை நடத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் உறுதியான தகவல் இந்த செய்தியை கேட்ட சிம்பு ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளன. மேலும் இதுகுறித்த உறுதியான தகவலை சிம்பு விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிம்புக்கு எந்த அனுபவமும் இல்லை என்றாலும், ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி ஷோவில் நீதிபதியாக இருந்த சிம்புவின் பங்களிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, மேலும் பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் தெளிவாக பல கருத்துகளை இவர் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.