திடீரென பாஜக தந்த அசைன்மென்ட்.. தட்டி தூக்கும் நபர்கள் யார்.. "10 தொகுதிகள்".. வெலவெலக்கும் கட்சிகள்

இந்த முறை அந்த தாமரையை மலர வைத்தே தீருவது என்ற கங்கணம் கட்டி கொண்டுள்ளதால், படுசுறுசுறுப்பில் பாஜக தேர்தல் யுக்திகளில் ஆர்வம் காட்டி வருகிறது..! வரப்போகிற தேர்தல் அதிமுக, திமுகவுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாஜகவுக்கும் முக்கியம்.. முக்கால்பாக தேசத்தை தன் கைப்பிடியில் வைத்துள்ள நிலையில், தென்மாநிலங்களில் அதுவும் தமிழகத்தை தன்னகத்தே கொண்டு வர முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. அதற்காக பல வியூகங்களையும் கையில் எடுத்துள்ளது.. இதை அடிப்படையாக வைத்து ஒருசில அசைன்மென்ட்டுகளையும் அக்கட்சிக்கு ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திடீரென பாஜக தந்த அசைன்மென்ட்.. தட்டி தூக்கும் நபர்கள் யார்.. "10 தொகுதிகள்".. வெலவெலக்கும் கட்சிகள்

அமித்ஷா 

அந்த வகையில் தொகுதியில் முழு கவனத்தை செலுத்துவதுதான் முதல் குறியாக உள்ளது.. அமித்ஷாவை லீலா பேலஸ் ஓட்டலில் சந்தித்து அதிமுக தலைமை சீட் விஷயமாக பேச்சை எடுக்கும்போதே, வெறும் 5 சீட்டில்தான் ஆரம்பித்தனராம்.. இதனால் அதிர்ந்து போன அமித்ஷா மெல்ல மெல்ல பேசியே, சீட் எண்ணிக்கை அதிகமாகி 20 என்று வந்து முடிந்துள்ளது.. 60 கேட்டால் 20 தருகிறாரே என்று எடப்பாடியாரின் சாமர்த்தியத்தை கண்டு அமித்ஷா வியந்து போனாலும், இந்த 20 சீட்களில் குறைந்தது 10 இடத்திலாவது வென்று காட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளதாம்.

முருகன்

பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே தேர்தல் பணிகளை துவக்கி மக்களை சந்தித்து வருகின்றனர், பாஜக போட்டியிட உள்ள, 20 தொகுதிகளிலும், வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. நுாற்றுக்கு நுாறு என்று அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எல்.முருகன் நேற்றைய தினம்கூட நம்பிக்கையுடன் சொல்லி இருந்தாலும், 20-ல் 10 தொகுதிகளில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற பிளான்கள் வகுக்கப்பட்டு வருகிறதாம்.

சொந்த கட்சி அப்படி யாராவது சிக்கினால், உடனே தவி, உடனே சீட் என்ற வாக்குறுதிகளையும் பாஜக தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுவரை சொந்த கட்சிக்காக யாரெல்லாம் செலவு செய்தும், சீட் கிடைக்காமல் இருட்டடிப்புக்கு ஆளானார்களோ, அவர்களுக்கும் வலை விரித்துள்ளதாம் பாஜக.. இதுதான் அதிமுக, உட்பட பல கட்சிகளை கலக்கத்தில் வைத்து வருகிறது. வழக்கமாக தேர்தல் சமயங்களைவிட, தேர்தல் முடிந்த பிறகுதான் பாஜகவின் அதிரடி ஆட்டம் அந்தந்த மாநிலங்களில் ஆரம்பமாகும்.. அதே யுக்தியை தமிழகத்தில் கையாள வாய்ப்பிருந்தாலும், தேர்தலில் சமயத்திலும் பாஜக பலே வியூகம் அமைத்து வருவது மற்ற கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம்.