"ட்விஸ்ட்".. சித்ரா ஃபேனில்தான் தொங்கினாரா.. பரபரப்பை கிளப்பிய அம்மா.. வெடித்து கிளம்பிய மர்மம்..!

சித்ரா மரணம் தொடர்பாக புது சந்தேகத்தை அவரது அம்மா கிளப்பி விட்டு சென்றுள்ளார்.. இதற்காவது பதில் கிடைக்குமா என்று சித்ராவின் ரசிகர்கள் ஏக்கம் கலந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர். சித்ரா மரணத்தின் மர்மம் நீடித்து கொண்டே இருக்கிறது.. சித்ரா இறந்த முதல் நாளில் இருந்தே பலவித மர்மங்களுடன்தான் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். சித்ராவின் தற்கொலைக்கு காரணமான ஹேமந்த் கைது செய்யப்பட்டார்... ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால், ஜாமீன் பெற்று வெளியே இருக்கிறார். நிபந்தனை ஜாமீனை பெற்றுள்ள ஹேமந்த், மதுரையில் தங்கியிருந்து அண்ணா நகர் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட்டும் வருகிறார்.

"ட்விஸ்ட்".. சித்ரா ஃபேனில்தான் தொங்கினாரா.. பரபரப்பை கிளப்பிய அம்மா.. வெடித்து கிளம்பிய மர்மம்..!

ஹோட்டல் ரூம் இப்படிப்பட்ட சமயத்தில்தான் சித்ரா சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று வெளியானது.. சித்ரா தங்கியிருந்த அந்த ஹோட்டல் ரூமில், இருந்த சித்ராவின் டிரஸ்களை எடுத்து செல்ல போலீசார் அனுமதி தந்துள்ளனர்.. இதேபோல ஹேமந்த் குடும்பத்துக்கும் அனுமதி தந்தனர்.. அதன்படியே கடந்த வாரம், சித்ராவின் அம்மா, அப்பாவும், உறவுக்கார பெண்ணும் வந்திருந்தனர்.


தற்கொலை சித்ரா

தங்கியிருந்த ரூம் நம்பர் 113 ஆகும்.. அந்த ரூமை திறந்ததுமே அழ ஆரம்பித்துவிட்டார் சித்ராவின் அம்மா.. சித்ரா தற்கொலை செய்துகொண்ட அந்த சீலிங் ஃபேனை பார்த்து பார்த்து கதறினார்.. பிறகு திடீரென கட்டிலின் மீது ஏறி கொண்டு, அந்த ஃபேனை பிடித்து தொங்கினார்.. "இது எனக்கே இப்படி எட்டுதே, என் பொண்ணு எப்படி இதில் தற்கொலை செய்துகொள்ள முடியும்?" என்று கேட்டு கொண்டே கதறினார். இதன்பிறகு ரூமையே சுற்றி சுற்றி வந்தவர், "சித்ரா நீ எங்கம்மா இருக்கே?" என்று கேட்டுக்கொண்டே இருந்தார்..

கேள்விகள் சித்ராவின்

டிரஸ்கள், மேக்கப் பொருட்கள் எல்லாவற்றையும் பேக் செய்து கொண்டு சென்றுவிட்டார். சித்ரா அம்மா எழுப்பிய கேள்விகளும், அந்த வீடியோவுதான் சித்ரா ரசிகர்களை நிலைகுலைய வைத்து வருகிறது.. அவர் அம்மா கேட்டது நியாயமான கேள்வி என்பது மட்டுமல்ல, மிகப்பெரிய சந்தேகமும் அதில் ஒளிந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. சித்ரா சற்று உயரமானவர்.. அதனால் அந்த ஃபேனில் எப்படி தொங்கியிருக்க முடியும்? இதற்காவது நியாயம் கிடைக்குமா? ஃபேனில் சித்ரா தொங்கினாரா? என்று மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்தப்படுமா? என்று ரசிகர்கள் கோரிக்கையை எழுப்பி

வருகிறார்கள்.

மர்மம் ஆனால்,

சித்ரா மரணம் அப்படி இல்லை... உண்மையிலேயே சித்ரா எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? சித்ரா இறந்த அன்றிரவு ஹோட்டல் ரூமில் என்னதான் நடந்தது? என்பது பற்றி இதுவரை முழுமையான தகவல்கள் வெளியே வராத சூழலில், இப்போது இன்னொரு கேள்வியும் சித்ராவின் மரணத்தை தொத்தி நிற்கிறது..!