மே 10 முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம்.. முதல் தவணை ரூ 2000 விநியோகம்

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துளளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் பொறு

மே 10 முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம்.. முதல் தவணை ரூ 2000 விநியோகம்

முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் அதாவது 10-ஆம் தேதி முதல் கொரோனா நிவாரண திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.


நிவாரணத் தொகை முதல் தவணையாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 2000 வழங்கப்படுகிறது. இதை உணவுத் துறை அமைச்சர் அர சக்கரபாணி அறிவித்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும்.