டைரக்டர் ஹரிக்கு என்ன பிரச்சனை...மருத்துவமனையில் அனுமதிக்க இது தான் காரணமா

டைரக்டர் ஹரி, அதிக காய்ச்சல் காரணமாக பழநினியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஹரி, தற்போது அருண் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

டைரக்டர் ஹரிக்கு என்ன பிரச்சனை...மருத்துவமனையில் அனுமதிக்க இது தான் காரணமா

இந்த மாத துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏவி 33 படத்தின் சூட்டிங் பழநியில் நடைபெற்று வருகிறது. இந்த படக்குழுவில் பணியாற்றிய ஓருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் டைரக்டர் ஹரிக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருந்தாலும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹரிக்கு அதிக காய்ச்சல் இருந்தாலும் அவர் விரைவில் குணமடைந்து, பணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. மிகவும் சுறுசுறுப்பான மனிதரான ஹரி விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பூரணமாக உடல்நிலை சரியான பிறகு தான் ஹரி, பட வேலைகளை துவக்குவார் என கூறப்படுகிறது.

ஏவி 33 படத்தில் அருண் விஜய்யுடன், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், பிரகாஷ் ராஜ், குக் வித் கோமாளி புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.