‘நாளை’ என ட்வீட் போட்ட நெல்சன்.. பீஸ்ட்-க்கு என்ன தான் பிரச்சனை

சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்துடன் ரிலீஸ் பண்ண வேண்டாமே ஓரிரு வாரம் தள்ளிப் போகலாமே என சொன்னதற்கு நடிகர் விஜய் தேதியை மாற்ற வேண்டாம் என மறுப்பு தெரிவித்தது தான்

‘நாளை’ என ட்வீட் போட்ட நெல்சன்.. பீஸ்ட்-க்கு என்ன தான் பிரச்சனை

ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் அந்த படத்திற்கான ஒட்டுமொத்த புரமோஷனையும் தொடங்காமல் அப்படியே நிறுத்தி வைத்திருப்பது ஏன் என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் மனங்களில் எழுப்பி உள்ளது.

இதுவரை நடிகர் விஜய் நடிக்கும் எந்தவொரு படத்துக்கும் இப்படி நடந்ததே கிடையாது என்றும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததில் இருந்தே ஏகப்பட்ட அரசியல் நெருக்கடிகள் பீஸ்ட் படத்திற்கு எழுந்துள்ளதா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. எப்போ தான் அப்டேட் வரும் என ரசிகர்கள் இயக்குநர் நெல்சனை நெருக்க அவர் தற்போது "நாளை" என ட்வீட் போட்டுள்ளார்

 பீஸ்ட் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை சன் பிக்சர்ஸ் கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றால் நிமிஷத்துக்கு நிமிஷம் புரமோஷன் வீடியோக்களை போட்டு அதகளம் செய்து விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்கிற நிலை மாறி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் அமைதிக்கு என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நெல்சன் போட்ட நாளை

பீஸ்ட் டீசர் அல்லது டிரைலர் ஏதாவது ஒரு அப்டேட் வந்தே ஆக வேண்டும் என்றும் கேஜிஎஃப் 2வெல்லாம் புரமோஷன் ஆரம்பித்து விட்டார்கள். பான் இந்தியா படம் என்று சொல்லிவிட்டு இன்னும் இங்கேயே புரமோஷனை ஆரம்பிக்காதது ஏன் என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பி வந்த நிலையில், இயக்குநர் நெல்சன் தற்போது "நாளை" என ட்வீட் போட்டுள்ளார்.

என்ன வரும் வெறும் "நாளை" என இயக்குநர் நெல்சன் ட்வீட் போட்டுள்ள நிலையில், நாளை பீஸ்ட் படத்தின் டீசர் வருகிறதா? அல்லது டிரைலர் வருகிறதா? என கேட்டு இயக்குநர் நெல்சனை துவைத்து தொங்கப் போட்டு வருகின்றனர் தளபதி ரசிகர்கள். பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு தான் நாளை வரும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 பீஸ்ட் படம் தொடர்பான புரமோஷன்களை திடீரென சன் பிக்சர்ஸ் நிறுத்தி வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பீஸ்ட் படத்தின் ஃபைனல் அவுட் புட்டை பார்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு திருப்தி இல்லாதது தான் காரணம் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், பீஸ்ட் படத்திற்கு இதுவரை செலவு செய்ததே போதும் என நினைத்து விட்டதா சன் பிக்சர்ஸ் என கேள்விகள் கிளம்பி உள்ளன.

மறுத்து விட்ட விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்துடன் ரிலீஸ் பண்ண வேண்டாமே ஓரிரு வாரம் தள்ளிப் போகலாமே என சொன்னதற்கு நடிகர் விஜய் தேதியை மாற்ற வேண்டாம் என மறுப்பு தெரிவித்தது தான் புரமோஷன் பண்ணாமல் அப்படியே படத்தை ரிலீஸ் பண்ண சன் பிக்சர்ஸ் முடிவெடுத்து விட்டதற்கு காரணம் என்கின்றனர்.