கொத்தோடு" கொங்குவை அள்ளும் திமுக.. 46 தொகுதிகளில் அதிரடி போட்டி.. மிரட்சியில் அதிமுக!

சென்னை: கொங்கு மண்டலத்தில் திமுக 46 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.. இப்படி ஒரு அறிவிப்பு மிக துணிச்சலானது.. அசாத்திய தைரியமிக்கது.. அதிமுகவுக்கு நேரடி சவால் விடுவது என்ற விவாதங்கள் அதிர கிளம்பி வருகின்றன. கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை கொண்டதாகும்.. இங்கு மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

கொத்தோடு" கொங்குவை அள்ளும் திமுக.. 46 தொகுதிகளில் அதிரடி போட்டி.. மிரட்சியில் அதிமுக!

வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. இதற்கடுத்து முதலியார்கள்... அருந்ததியினர்.. என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இது எம்ஜிஆரின் கோட்டை.

முதலமைச்சர் 

எம்ஜிஆருக்கு பிறகுகூட, கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார் ஜெயலலிதா.. இதற்கு பிறகு கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.. இதுதான் ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தது... இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை என்பதும் அதிமுகவுக்கு கூடுதல் பிளஸ்..


  
  அமைச்சர்கள்
   இதைதவிர, கடந்த வருடங்களில் அதிமுக அரசு இந்த கொங்கு மண்டலத்துக்கு செய்த நலத்திட்டங்கள் ஏராளம்.. மிக மிக முக்கிய அமைச்சர்கள் 4 பேர் இதே கொங்குவில் இருப்பதால், சகல அறிவிப்புகளும் இந்த மண்டல மக்களை குளிர்வித்தபடியே இருந்து வருகின்றன. அதனால், திமுகவின் வெற்றி என்பது இங்கு அவ்வளவு சுலபம் கிடையாது... கலைஞர் இருந்தபோது, கொங்கு வேளாளருக்கு பிசி சட்டம் கொண்டுவந்தார்...

திருமாவளவன் அதிமுகவின் கோட்டை என்று தெரிந்தும், பாஜகவின் ஆதரவு சார்ந்த இடம் என்று தெரிந்தும், திருமாவளவன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு 10 வருட கோபம் இருக்கிறது என்று தெரிந்தும், 46 இடங்களில் திமுக மோதுகிறது என்றால், உண்மையில் ஸ்டாலினின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.. கொங்குவை கொக்கி போட்டு இழுக்க போவது யார்? எடப்பாடியாரா? ஸ்டாலினா? பார்ப்போம்..! அனல் பறக்கும் தேர்தல் களம், சினிமா செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்..ஒன்இந்தியாவின் டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்