சென்டிமென்ட்".. எதிர்பார்க்காத அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி.. ஆடிப்போன திமுக கேம்ப்.. போச்சு

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் பழனிசாமி கையில் எடுத்து இருக்கும் அஸ்திரம் திமுகவை திக்குமுக்காட வைத்துள்ளது. தமிழக தேர்தல் பிரச்சாரம் என்பது மற்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களை விட எப்போதும் வித்தியாசமானதாக இருக்கும். தமிழகத்தில் தனி நபர் தாக்குதலை விட சாதுர்யமான பேச்சுக்குத்தான் மக்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள்.

சென்டிமென்ட்".. எதிர்பார்க்காத அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி.. ஆடிப்போன திமுக கேம்ப்.. போச்சு

மக்களோடு மக்களாக..தன்னை எளிமையாக காட்டிக்கொள்ளும் யுக்தியைத்தான் தற்போது முதல்வர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார். தன்னுடைய எளிமையான பின்னணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இபிஎஸ் தெளிவாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக இபிஎஸ் செய்யும் பிரச்சாரங்களில் இது வெளிப்படையாக தெரிகிறது .. ஒருவகையில் இது இபிஎஸ்ஸுக்கு ஆதரவை அதிகமாக்கி உள்ளது.

என்ன சொல்கிறார் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் இபிஎஸ் சொல்வது ஒன்றுதான்.. நான் எளிமையான பின்னணியை கொண்டவன். ஸ்டாலின் போல வாரிசு இல்லை. என் குடும்பம் அரசியல் குடும்பம் இல்லை. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எளிய மக்களின் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.

ஸ்டாலின் ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி ஏழைகள் பற்றி என்ன தெரியும்.. என்று இபிஎஸ் போகிற இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். தனி ஆளாக சென்று வேட்புமனு தாக்கல் செய்வது, விவசாயிகளுடன் களத்தில் இறங்கி பேசுவது , வரப்பில் நடப்பது , மக்கள் எளிதாக அணுகும் வகையில் இருப்பது என்று இபிஎஸ் தன்னை மக்களில் ஒருவராக காட்டிக்கொள்கிறார். இங்குதான் ஸ்டாலின் இபிஎஸ்ஸை விட கொஞ்சம் பின்தங்கிவிட்டார்.

ஸ்டாலின் மாற்றம் புதிய சிகை அலங்காரம், கையில் கிளவுஸ், ஸ்டைல் பிரச்சாரம் என்று ஸ்டாலின் கொஞ்சம் எளிய மக்களிடம் இருந்து விலகி இருக்கிறார். நகரங்களில் ஸ்டாலினின் இந்த ஸ்டைல் எடுபட்டாலும் கிராமங்களில் பெரிய அளவில் இது மக்களை கவருமா என்பது சந்தேகம். இங்குதான் ஸ்டாலினை ஓவர்டேக் செய்து தன்னை ஒரு எளிய பின்னணி கொண்டவராக இபிஎஸ் காட்டிக்கொள்கிறார் .

வாய்ப்பு இதே யுக்தி தற்போது இபிஎஸ்ஸுக்கும் கை கொடுத்துள்ளது.