என்ன வலிமை அப்டேட்டை தேர்தல் ஆணையம் வெளியிடுது.. வைரலாகும் போஸ்டர்.. அப்செட்டில் அஜித் ரசிகர்கள்!

மார்ச் மாதம் முதல் வாரத்தில் வலிமை படத்தின் அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள தேர்தல் ஆணையம் தற்போது 'வலிமை' என்கிற வார்த்தையை கையில் எடுத்து வெளியிட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

என்ன வலிமை அப்டேட்டை தேர்தல் ஆணையம் வெளியிடுது.. வைரலாகும் போஸ்டர்.. அப்செட்டில் அஜித் ரசிகர்கள்!

500 நாட்களை கடந்து வலிமை படத்திற்கு பூஜை போட்டு டைட்டில் அறிவித்து 500 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், இன்னமும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கூட படக்குழு வெளியிடவில்லை. தல ரசிகர்கள் அப்டேட் கேட்டு பண்ண அலப்பறையை பார்த்த போனி கபூர் மற்றும் அஜித் குமார் சீக்கிரமே அப்டேட் வரும் என்று கூறியிருந்தனர்.

டிரெண்டான அஜித் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இறுதிக்குள் வெளியாகி விடும், மார்ச் முதல் வாரத்தில் வெளியாகி விடும் என நினைத்து கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் ஆரம்பித்தனர். ரசிகர்களுக்காக, அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள், ஷாலினியுடன் செல்ஃபி எடுத்தது, துப்பாக்கிச் சுடுதலில் கலந்து கொண்டது. கமிஷனர் ஆபிஸ் சென்றது என ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு டிரெண்ட் செய்தனர்.

வலிமை அப்டேட் வந்துடுச்சு

இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் இதோ வலிமை அப்டேட் வந்துடுச்சு, தேர்தல் ஆணையமே தல அஜித்தின் வலிமை படத்தின் டைட்டிலை வைத்துத் தான் விளம்பரம் செய்துள்ளனர். இதுவும் வலிமை படத்திற்கு ஒரு புரமோஷனாகவே அமைந்துள்ளது என ரசிகர்கள் தங்களை தாங்களே ஆறுதல் படுத்தி வருகின்றனர். பத்து நாள்ல படத்தோட ஷூட்டிங்கையே சிலர் முடித்து விடுகின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி பண்ண ஏன் இவ்ளோ தாமதம்ன்னு தெரியலையே?