தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்.. 5 மாநிலங்களில் தேர்தல்கள் எப்போது? முழு விவரம்

டெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்பட்டது. டெல்லியில் மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அப்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்.. 5 மாநிலங்களில் தேர்தல்கள் எப்போது? முழு விவரம்


 அப்போது, மாநில தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தளவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி 2 நாட்களுக்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான கட்சிகளின் கோரிக்கையாக இருந்தது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதாலும், மே மாதம், 12ம் வகுப்புக்கான தேர்வு நடைபெறும். இதை கருத்தில் வைத்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தமிழ அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுத்திருந்தன. இன்று மாலை நிருபர்களிடம் பேசிய சுனில் அரோரா கூறியதாவது:


தமிழகம், புதுச்சேரி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும். மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி. வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேற்கு வங்கம் தேர்தல் மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 1ம் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 6ம் தேதி 3வது கட்டம், ஏப்ரல் 10ம் தேதி 4ம் கட்டம், ஏப்ரல் 17ம் தேதி 5வது கட்டம், ஏப்ரல் 22ம் தேதி 6வது கட்டம், ஏப்ரல் 26ம் தேதி 7வது கட்டம், ஏப்ரல் 29ம் தேதி 9வது கட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதனால்தான் தமிழக வாக்கு எண்ணிக்கையும், மே 2ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. தமிழகத்தில் இவ்வளவு தாமதமாக வாக்கு எண்ணப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்.