சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.608 உயர்ந்துள்ளது. இதனால் இன்று மாலை நிலவரப்படிஒரு சவரன் தங்கம் ரூ.33,904-க்கு விற்பனையாகிறது தங்கத்திற்கு போடப்பட்ட இறக்குமதி வரிகுறைந்து மற்றும் சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம் விலை 37000த்தில் 35 ஆயிரம் அளவிற்கு கடந்த இரண்டு மாதங்களில் குறைந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை 33 ஆயிரத்து 500 முதல் 34 ஆயிரத்திற்குள் தான் தங்கம் விற்பனையாகி வந்தது.

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி

ஆனால் சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ40 குறைந்து ஒரு கிராம் ரூ.4162க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.33296க்கும் விற்கப்பட்டது. இன்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 உயர்ந்துள்ளது. இதனால் இன்று மாலை நிலவரப்படிஒரு சவரன் தங்கம் ரூ.33,904-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகஉயர்ந்திருப்பது தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. குறைந்து கொண்டே வந்த தங்கம் இன்று மட்டும் 608 ருபாய் உயர்ந்திருப்பதால் இனி வரும் நாட்களிலும் உயருமோ என்ற கவலை, திருமணத்திற்கு நகை சேர்க்கும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பார் வெள்ளி, 67600.ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று 1100 ரூபாய் உயர்ந்து ரூ.68700க்கு விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கு சென்னையில் விற்பனையாகிறது. அனல் பறக்கும் தேர்தல் களம், சினிமா செய்திகள்,