முதல் போட்டியில தோல்வி... திருப்பி தாக்க தீவிரமாக இருக்காங்க இந்திய வீரர்கள்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணியளவில் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா திருப்பி தாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல் போட்டியில தோல்வி... திருப்பி தாக்க தீவிரமாக இருக்காங்க இந்திய வீரர்கள்!

2வது டி20 போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 124 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பில் எளிதாக இந்த இலக்கை அடைந்தது.


இன்றைய தினம் நடைபெறுகிறது இந்நிலையில் அதே மைதானத்தில் இன்றைய தினம் டி20 தொடரின் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்தை திருப்பி தாக்க இந்திய அணி முனைப்புடன் உள்ளது. கடந்த போட்டியில் 6 
பௌலர்கள் இருந்தும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த மிகுந்த சிரமப்பட்டது இந்திய அணி.

இன்றைய தினம் நடைபெறுகிறது இந்நிலையில் அதே மைதானத்தில் இன்றைய தினம் டி20 தொடரின் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்தை திருப்பி தாக்க இந்திய அணி முனைப்புடன் உள்ளது. கடந்த போட்டியில் 6 பௌலர்கள் இருந்தும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த மிகுந்த சிரமப்பட்டது இந்திய அணி.

தடுமாறிய இந்தியா இதேபோல இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், துவக்க வீரர்களாக ஆடிய ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து 22 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

பாண்டியா, பந்த் சிறப்பு ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அரைசதத்தை கடந்த நிலையில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்தும் ஓரளவுக்கு கைகொடுத்து இந்தியாவின் ரன்னை உயர்த்தினர். ஆயினும் 124 ரன்களில் இந்தியா அனைத்து ஓவர்களையும் ஆடி வெளியேறியது. ஆனால் இந்த ஸ்கோரை இங்கிலாந்து மிக எளிதாக கடந்தது.

எளிதான இலக்கு இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய், பட்லர் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து 72 ரன்களை குவித்தனர். இதையடுத்து அந்த அணிக்கு 125 இலக்கு என்பது மிகவும் எளிதாக இருந்தது. மேலும் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றனர்.