தோனியின் ‘மாஸ்டர்’ பிளான்... ஆர்சிபிக்கு தண்ணி காட்டிய ஜடேஜா.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

ஜடேஜாவின் அசத்தல் ஆட்டத்தால் ஆர்சிபி அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தோனியின் ‘மாஸ்டர்’ பிளான்... ஆர்சிபிக்கு தண்ணி காட்டிய ஜடேஜா.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இமாலய இலக்கு 19வது ஓவர் வரை 154 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சிஎஸ்கே, ரவீந்திர ஜடேஜாவின் காட்டடியால் கடைசி ஓவரில் 37 ரன்களை குவித்தது. ஹர்ஷல் பட்டேல் வீசிய அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி வந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 191 ரன்கள் குவித்தது. பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிரட்டிய ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். இதில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளும் அடங்கும். அவருடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த

ஓப்பனிங் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ஆனால் நீண்ட நேரம் இந்த பார்ட்னர்ஷிப் நிலைக்கவில்லை. அந்த அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கோலி 8 ரன்களுக்கு வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் இந்த விக்கெட்டிற்கு பிறகு ஆர்சிபி அணியில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது பெங்களூரு அணி.

ஜடேஜா சுழல் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஜடேஜா பவுலிங்கிலும் 3 விக்கெட்களை எடுத்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர்கள் க்ளென் மேக்ஸ்வெல்(22), டிவில்லியர்ஸ்(4), டேனியல் கிறிஸ்டியன் (1) என அடுத்தடுத்து ஜடேஜா சுழலில் சிக்கி வெளியேறினர்.

சிஎஸ்கே வெற்றி ஐபிஎல் தொடரில் இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கிய இம்ரான் தாஹீர் தனது பங்கிற்கு ஹர்ஷல் பட்டேல்(0), நவ்தீப் சைனி (2) என 2 விக்கெட்களை எடுத்தார். இதன் பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்ட ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.