பக்கா பிளானோடு அனுப்பிய தோனி, அசைமெண்ட்டை முடித்த ரெய்னா

டெல்லிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் இன்று சிஎஸ்கே வீரர்கள் திட்டமிட்டு பேட்டிங் செய்து வந்தனர். முறையான பிளானோடு சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று ஆடினார்கள்.

பக்கா பிளானோடு அனுப்பிய தோனி, அசைமெண்ட்டை முடித்த ரெய்னா

 டெல்லிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் இன்று சிஎஸ்கே வீரர்கள் திட்டமிட்டு பேட்டிங் செய்து வந்தனர். முறையான பிளானோடு சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று ஆடினார்கள். டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் இறங்கி ஆடி வருகிறது. 
முதல் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் சிஎஸ்கே சரிவில் இருந்து வேகமாக மீண்டு வந்தது. முக்கியமாக ரெய்னா, மொயின் அலி சிஎஸ்கேவை சரிவில் இருந்து மீட்டு வேகமாக ரன் ரேட்டை உயர்த்தினார்கள். அதிலும் ரெய்னா ஆரம்பித்து இருந்து அதிரடி காட்டினார்.

ரெய்னா கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு பிறகு ஆடுகிறார். ஆனாலும் அதற்கான அறிகுறியே இலலாமல் ரெய்னா அதிரடி காட்டினார். மொயின் அலியோடு சேர்ந்து கொண்டு சிக்எஸ், பவுண்டரி என்று பறக்கவிட்டார். இதனால் வேகமாக சிஎஸ்கே அணியின் ரன் உயர தொடங்கியது.

முக்கியமாக டெல்லி அணியின் ஸ்பின் பவுலர்களை ரெய்னா, மொயின் அலி இருவரும் குறி வைத்தனர். அமித் மிஸ்ரா, அஸ்வினை குறி வைத்து தாக்கினார்கள். முக்கியமாக மொயின் அலி அஸ்வினை குறி வைத்து சிக்ஸ், பவுண்டரி அடித்தார். பின் ரெய்னாவும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆனார்.

மொயின் அலி அவுட் ஆன பின் ரெய்னா - ராயுடு இருவரும் அஸ்வின் ஓவரை குறி வைத்து தாக்கினார்கள். ஸ்பின் பவுலிங்கில் வெளுக்க வேண்டும் என்று திட்டமிட்டு பவுலிங் செய்தனர். அதன்பின் அமித் மிஸ்ராவின் 12வது ஓவரில் மட்டும் 12 ரன்கள் எடுத்தனர்.

அந்த ஓவரில் ரெய்னா ருத்ர தாண்டவம் ஆடினார் என்றுதான் கூற வேண்டும். சிஎஸ்கே கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு.. இவ்வளவு அதிரடியாக மிடில் ஓவர்களில் ஆட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டிகளில் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே மோசமாக ஆடியது.

ஆனால் இந்த போட்டியில் ரெய்னா வருகைக்கு பின் எல்லாம் மாறியுள்ளது. மிடில் ஓவர்களில் மட்டும் இன்று ஓவருக்கு 10 ரன்களை சிஎஸ்கே எடுத்தது. கடந்த வருடம் செய்த தவறுக்கு எல்லாம் இந்த வருடம் சிஎஸ்கே சிறப்பாக பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது.