பயிற்சிக்கு வராத ரெய்னா,என்ன காரணம்? சிஎஸ்கே ரசிகர்கள் குழப்பம்!

கடந்த சீசனின் சி.எஸ்.கே அணிக்காக ஆடவிருந்த ரெய்னா, இறுதியில் தொடரில் பங்கேற்கவில்லை. முதலில் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை எனக்கூறப்பட்டது.

பயிற்சிக்கு வராத ரெய்னா,என்ன காரணம்? சிஎஸ்கே ரசிகர்கள் குழப்பம்!

 ஐபிஎல்-காக சி.எஸ்.கே அணி பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ரெய்னாவின் செயல், ரசிகர்களுக்கு மீண்டும் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

கடந்த ஐபிஎல் தொடரில் தோனியின் சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தாண்டு தொடருக்காக, அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 9 
14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால் இந்த முறை கோப்பையை வெல்ல அனுபவ வீரர்களுடன் களமிறங்குகிறது.

ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளன. அதன்படி சி.எஸ்.கே முதலாவதாக அணியாக சென்னையில் பயிற்சியை தொடங்கியது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட், மற்றும் உள்ளூர் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் போட்டி தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்னாள் மும்பைக்கு பயிற்சி முகாமை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரெய்னா இல்லையா
போட்டியில் ஓய்வில் இருக்கும் அனைத்து வீரர்களும் பங்கேற்ற நிலையில் ரெய்னா இன்னும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பேசிய அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களாக இன்னும் பயிற்சியில் பங்கு பெறவில்லை. அவர் அணி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுவிட்டார். வீரர்களின் தனிப்பட்ட கடமைகளை நாங்கள் மதிக்கிறோம். ரெய்னா மார்ச் 21ம் தேதிக்குள் பயிற்சியில் பங்கேற்பார். நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனின் சி.எஸ்.கே அணிக்காக ஆடவிருந்த ரெய்னா, இறுதியில் தொடரில் பங்கேற்கவில்லை. முதலில் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை எனக்கூறப்பட்டது. பின்னர் ரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது, மேலும் ரெய்னா இருந்திருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும் என கூறப்பட்டது. எனினும் அந்த பிரச்னை பிறகு சுமூகமாக முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டும் சுரேஷ் ரெய்னா வருவதற்கு தாமதமாவதால் மீண்டும் கருத்துவேறுபாடா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.