தனிப்பட்ட கோபம்.. வலி.. கொத்தாக திருப்பி கொடுத்த தீபக் ஹூடா.. குர்னால் பாண்டியாவிற்கு நெத்தியடி!

பல நாள் புறக்கணிப்பு.. தனிப்பட்ட கோபம்.. இயலாமை அனைத்திற்கும் நேற்று ஒரே போட்டியில் தீபக் ஹூடா பதில் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 222 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்து நூலிழையில் தோல்வி அடைந்தது. நேற்று ராஜஸ்தான் அணியில் ராகுல், கெயில் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காமல் நேற்று தீபக் ஹூடா ஷாக்கிங் சர்ப்ரைஸாக களமிறங்கி வெளுத்து வாங்கினார்.

தனிப்பட்ட கோபம்.. வலி.. கொத்தாக திருப்பி கொடுத்த தீபக் ஹூடா.. குர்னால் பாண்டியாவிற்கு நெத்தியடி!

ராஜஸ்தான் ராஜஸ்தானுக்காக இவர் களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். தொடக்கத்தில் இருந்து வேகம் காட்டிய ஹூடா 27 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். அதிலும் இவர் ஷிவம் துபே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து மைதானத்தை அதிர வைத்தார். ஸ்பின் பவுலர்கள் ஓவரில் குறி வைத்து சிக்ஸ் அடித்தது என்று தீபக் ஹூடா மாஸ்

சிறப்பு ஒரு பக்கம் ராகுல் கொஞ்சம் மெதுவாக ஆட தீபக் ஹூடா சிலபஸிலேயே இல்லாத அளவிற்கு சிக்ஸ், பவுண்டரி என்று பறக்கவிட்டார். சக்காரியா ஓவரை தவிர மற்ற எல்லோரின் ஓவரில் நேற்று தீபக் ஹூடா பொளந்து கட்டினார். நேற்று மட்டும் 6 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்தார். இந்த போட்டியில் இவரை ஸ்டிரைக் ரேட் 224. பஞ்சாப் நேற்று வெல்ல முக்கிய காரணமாக டெத் ஓவர்களில் இவர் ஆடிய ஆட்டம்தான்.

வேதனை நேற்று இவரின் ஆட்டத்திற்கு பின் பல நாள் வேதனை, வலியும் சேர்ந்தது இருந்தது. தன்னை தேவையின்றி புறக்கணித்தவர்களுக்கு எல்லாம் தீபக் ஹூடா நேற்று பதிலடி கொடுத்தார். முதல் தர போட்டிகளில் பரோடா அணியில் தீபக் ஹூடா ஆடி வருகிறார். இந்த பரோடா அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்னால் பாண்டியா இருக்கிறார்.

எப்படி இவர்தான் அணி தேர்வில் முக்கிய பந்து வகிக்கிறார். இவர் அணிக்குள் மற்ற வீரர்களை மோசமாக நடத்துவதாக புகார் எழுந்தது. இளம் வீரர்களை இவர் மோசமாக நடத்துகிறார் என்று புகார் வைக்கப்பட்டது. அணியின் துணை கேப்டன் தீபக் ஹுடாவை இவர் தொடர்ந்து கிண்டல் செய்து மோசமாக நடத்தி இருக்கிறார். பல இடங்களில் தீபக் ஹுடாவை குர்னால் பாண்டியா அவமானப்படுத்தி இருக்கிறார்

ஹூடா அணி நிர்வாகமும் ஹூடாவிற்கு ஆதரவாக நிற்காமல் குர்னால் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசி உள்ளது. அதோடு குர்னால் பாண்டியாவிற்கு ஆதரவாக ஹூடாவை அணியில் இருந்தே பரோடா நிர்வாகம் நீக்கியுள்ளது. இந்த வருடம் முழுக்க பரோடா அணியில் ஆட ஹூடாவிற்கு தடை விதிக்கப்பட்டது.

நிர்வாகம் அந்த அணிக்காக கஷ்டப்பட்டு உழைத்தவரையே அணி நிர்வாகம் நீக்கியது. குர்னால் கொடுத்த அழுத்தம் காரணமாக இப்படி நடந்தது. அந்த புறக்கணிப்புகளுக்கு எல்லாம் தற்போது தீபக் ஹூடா மொத்தமாக பதிலடிகொடுத்துள்ளார். என்னை அணியில் இருந்தா புறக்கணிக்கிறீர்கள்.. இதோ பாருங்கள் என் ஆட்டத்தை என்று ஒவ்வொரு பந்திலும் நேற்று சொல்லி சொல்லி அடித்தார்.

சதம் நேற்று 20 பந்தில் இவர் அரை சதம் அடித்ததுதான் ஐபிஎல்லி அடிக்கப்பட்ட 5வது அதிவேக அரைசதம் ஆகும். புறக்கணிப்பு அனைத்திற்கும் ஒரே போட்டியில் இவர் பதிலடி சொல்லி உள்ளார். சாந்தமாக முகத்தை வைத்துக், சிரித்துக்கொண்டே இவர் நேற்று அதிரடி காட்டியது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.