கர்ணன் படத்தின் டீசர் எப்போது.. தனுஷ் போட்ட அசத்தல் டிவீட்.. தெறிக்கும் டிவிட்டர்!

கர்ணன் படத்தின் டீசர் வெளியீடு குறித்து நடிகர் தனுஷ் டிவிட்டியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் கர்ணன்.

கர்ணன் படத்தின் டீசர் எப்போது.. தனுஷ் போட்ட அசத்தல் டிவீட்.. தெறிக்கும் டிவிட்டர்!
karnan, karnan teaser, dhanush tweet, dhanush, கர்ணன், கர்ணன் டீசர், தனுஷ் டிவிட், தனுஷ் "

டீசர் அப்டேட் ஏற்கனவே படத்தின் மூன்று சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் சர்ச்சைகளுக்கும் உள்ளானது. இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் டிவிட் நாளை மாலை 7.01க்கு கர்ணன் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில் நாளை மாலை 7.01க்கு கர்ணன் டீசர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கையில் வாளுடன் இருக்கும் கர்ணன் படத்தின் போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார்.

ட்ரென்டாகும் ஹேஷ்டேக் பல்வேறு திரையரங்குகளும் கர்ணன் டீசர் நாளை மாலை தங்களின் தியேட்டர்களில் திரையிடப்படும் என்றும் அறிவித்துள்ளன. கர்ணன் டீசர் குறித்த அறிவிப்பை தொடர்ந்து #KarnanTeaser என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.

ஸ்ட்ரைட்டா சம்பவம்தான் தனுஷின் ரசிகர்கள் கர்ணன் டீசர் அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்டை போட எவனும் இல்ல.. இனி பேச்சே கிடையாது.. ஸ்ட்ரைட்டா சம்பவம்தான் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.