தனுஷ் குரலில் வெளியானது கர்ணன் படத்தின் 3வது பாடல்.. எப்படி இருக்கு ‘தட்டான் தட்டான்’ பாட்டு?

சென்னை: தனுஷின் கர்ணன் படத்தின் மூன்றாவது பாடலான 'தட்டான் தட்டான்' பாடல் தற்போது வெளியாகி உள்ளது. திரெளபதையின் முத்தம் என்கிற அறிவிப்புடன் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாடலில் எங்குமே அந்த பெயர் இடம் பெறவே இல்லை.

தனுஷ் குரலில் வெளியானது கர்ணன் படத்தின் 3வது பாடல்.. எப்படி இருக்கு ‘தட்டான் தட்டான்’ பாட்டு?

மாறாக அருமையான மண் வாசம் நிறைந்த பாடலாக உருவாகி உள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

மாமன் கர்ணன் ஆனால், தட்டான் தட்டான் பாடலில் எங்கேயும் திரெளபதை என்கிற வார்த்தையே இல்லை. படத்தின் நாயகிக்கு இயக்குநர் திரெளபதை என பெயர் வைத்திருக்கிறாரா? என்பது படம் வெளியானால் தான் தெரியும். பாடல் தொடங்குவதற்கு முன்னதாக இடம்பெற்றுள்ள வரிகளில் மாமன் கர்ணனை தேடி மலை உச்சி ஏறினாள் திரெளபதை எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

பாடல் எப்படி இருக்கு? தமிழ் சொற்கள் நிறைந்து கிராமத்து மண் வாசனை, மழை வாசனையுடன் பாடல் இளையராஜா சாயலில் இடம்பெற்றுள்ளது. நாயகி ரஜிஷா விஜயனின் காட்சிகள், ஏர் உழுவும் காட்சிகளும் அதற்கேற்ற வரிகளும் பாடலை கேட்ட உடனே ரசிகர்களுக்கு பிடிக்க வைத்து விடுகிறது. ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்