பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது...அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்ட கார்த்தி

எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அதே பெயரிலேயே சினிமாவாக உருவாக்கி வருகிறார் டைரக்டர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் என பல மொழிகளில் புகழ்பெற்ற ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது...அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்ட கார்த்தி

பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் முழு இசையையும் ஏ.ஆர்.ரஹ்மான் கவனித்து வருகிறார். இந்நிலையில் சுல்தான் படம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனாவுடன் நேரடி கலைந்துரையாடல் நிகழ்ச்சியில் கார்த்தி பங்கேற்றார். கார்த்தியின் அடுத்த படம் பற்றி ராஷ்மிகா கேட்ட போது, தற்போது தான் நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும், கடந்த 60 ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகமே, பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க முயற்சித்து வருகிறது. அந்த கனவை மணிரத்னம் நிஜமாக்கி உள்ளார் என்றார் கார்த்தி. தொடர்ந்து பேசிய கார்த்தி, இது கொரோனா பரவல் காலம் என்பதால் படத்தின் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம் என்றார்.