இனிமேல் தான் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அறிவிப்பு வரப்போகுது. செங்கோட்டையன்

திமுக மற்றும் அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேர்தல் அறிக்கைகள் இனி அடுத்து வர உள்ளது.

இனிமேல் தான் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அறிவிப்பு வரப்போகுது. செங்கோட்டையன்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக மற்றும் அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேர்தல் அறிக்கைகள் இனி அடுத்து வர உள்ளது. 

அதிமுக திமுக இரண்டுமே என்ன மாதிரியான திட்டங்களை அறிவிக்க போகின்றன, எதை இலவசமாக தரப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வேறலெவலில் இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் அறிமுகம் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் பண்ணாரி என்பவரை கட்சியினரிடையே அறிமுகப்படுத்தி பேசினர்கள்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ள நிலையில் தற்போது இன்னும் மூன்று தினங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்கும் திட்டம் மற்றும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் வழங்கும் அறிவிப்பு உள்ளிட்டவைகளை முதல்வர் அறிவித்துள்ளர்.

இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெறும் ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் இனிமேல்தான் வெளிவரப்போகிறது இன்னும் மூன்று தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது அதில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அறிவிப்புகள் வெளியாகும்.

அதிமுக தேர்தல் அறிக்கை வந்தவுடன் திமுக காணாமல் போகும். பவானிசாகர் தொகுதியில் பண்ணாரி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அவருக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பேசினார்.