வைல்ட் டாக்' உடன் மோதும் 'சுல்தான்'...தம்பி கார்த்திக்கு வாழ்த்து சொன்ன நாகர்ஜூனா

கார்த்தி நடித்த சுல்தான் படம் ரிலீஸ் செய்யப்படும் ஏப்ரல் 2 ம் தேதி தான் நாகர்ஜூனா நடித்த வைல்ட் டாக் படமும் ரிலீசாக உள்ளது. சுல்தான் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

வைல்ட் டாக்' உடன் மோதும் 'சுல்தான்'...தம்பி கார்த்திக்கு வாழ்த்து சொன்ன நாகர்ஜூனா

நேற்று வைல்ட் டாக் படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜூனா, எங்கள் இருவரின் படங்களும் தெலுங்கில் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. தம்பி கார்த்தியின் படம் மிகப் பெரிய ஹிட்டாக எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடத்துள்ள சுல்தான் படம் ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. வைல்ட் டாக் படம், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம். என்ஐஏ குழு விசாரணையை மையமாகக் கொண்ட படம். நாகர்ஜூனா நடித்துள்ள இப்படத்தை ஆஷிஷோர் சாலமன் இயக்கி உள்ளார்.

இதற்கு முன் கார்த்தியும், நாகர்ஜூனாவும் தோழா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் ஓபிரி என்ற பெயரில் தெலுங்கில் ரிலீசானது. இந்த படத்தில் சாலமன் பணியாற்றி இருந்தார்.

தெலுங்கில் சுல்தான் படம் ரிலீசாக உள்ளதால், கோபிசந்தின் சீதிமார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை படத்திற்கு பிறகு தெலுங்கிலும் கார்த்திக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் மற்ற படங்களை கார்த்தி படத்துடன் வெளியிட தயக்கம் காட்டி வருகின்றனர்