கொரோனாவைவிட கொடூரமான ஸ்டெர்லைட்-எத்தனை உயிர் போனாலும் திறக்கவிடமாட்டோம்: தூத்துக்குடி மக்கள் ஆவேசம்

தூத்துக்குடி: கொரோனாவை விட கொடூரமான ஸ்டெர்லைட் ஆலையை எத்தனை உயிர்கள் போனாலும் திறக்க விடமாட்டோம் என்று தூத்துக்குடி பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

கொரோனாவைவிட கொடூரமான ஸ்டெர்லைட்-எத்தனை உயிர் போனாலும் திறக்கவிடமாட்டோம்: தூத்துக்குடி மக்கள் ஆவேசம்

தூத்துக்குடியில் நிலத்தடி நீரையும் காற்றையும் நஞ்சாக்கி உருக்கிறது வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட். இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2018-ல் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து சுற்றுச் சூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியது. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதையடுத்து சுற்றுச் சூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியது. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா இதனை பயன்படுத்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாகவே தருகிறோம் என்கிறது வேதாந்தா. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது வேதாந்தா.

ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு ஆனால் ஒட்டுமொத்த பொதுமக்களுமே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவே கூடாது என உறுதியான குரலில் தெரிவித்தனர். சுவாசிக்க வேண்டிய காற்றை நாசமாக்கிவிட்டு இப்போது சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜனை தயாரித்து கொடுக்கிறேன் என்கிறது வேதாந்தா. ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது மீண்டும் திறந்துவிடலாம் என கணக்குப் போட்டு செயல்படுகிறது வேதாந்தா குழுமம். கொரோனாவைவிட கொடூரமானது வேதாந்தா குழுமம் என்பது பொதுமக்களின் கருத்து.

சதியை முறியடிப்போம் மேலும் எங்கள் பிணங்கள் மீதுதான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிய்ம். ஆக்சிஜன் தேவை எனில் அதை சரி செய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை மட்டும்தான் தீர்வு அல்ல. மரண வாசலான ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என சதித்திட்டத்துடன் இறங்கியிருக்கிறது வேதாந்தா. இதனை நாங்கள் முறியடித்தே தீருவோம் என்றும் பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.