ஒரு மாதமாக அதிகரிக்காத பெட்ரோல், டீசல் விலை; இன்றைய விலை என்ன தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்று செய்யப்படவில்லை. பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அதிகரிக்கப்படவில்லை

ஒரு மாதமாக அதிகரிக்காத பெட்ரோல், டீசல் விலை; இன்றைய விலை என்ன தெரியுமா?

மக்களை வாட்டும் பெட்ரோல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சதத்தை கடந்து சென்றது. இடையில் ஒரு நாள் கூட விலை குறையாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சமையல் எண்ணெய் விலை உயர்வு வேறு அதிகரித்து மக்களை கடுமையாக வாட்டியது.

விலை குறைந்தது இவ்வாறு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 28-ந்தேதி ஓய்வெடுத்தது. அன்று முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 24 நாட்களுக்கு பிறகு 2 நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையில் தலா 16 காசு குறைந்திருந்தது.

விலையில் மாற்றமில்லை இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசும், டீசல் லிட்டருக்கு 35 காசும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே பெட்ரோல், லிட்டர் 92.77 ரூபாய், டீசல் லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

என்ன காரணம்? அதிவேகமாக சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை சுமார் ஒரு மாதங்களை தொட்டு அதிகரிக்கவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். 5 மாநில தேர்தல்களை மனதில் வைத்தே பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.