விடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா? இல்லை சறுக்குவாரா?

சில கட்சிகளின் கூட்டணி பேச்சுவர்த்தையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த முறையும் தனித்தே போட்டியிட போகிறோம் என்று கெத்தாக அறிவித்து இருக்கிறது நாம் தமிழர் கட்சி. 2019 மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் 16,45,185 வாக்குகள் அறுவடை செய்து வாக்கு சதவிகிதத்தை 1.07 லிருந்து 3.87 ஆக உயர்த்தி காட்டியது. இப்படியே தொடர்ந்து முன்னேறி சென்று இருக்க வேண்டிய நாம் தமிழர் 2020 உள்ளாட்சி தேர்தலில் ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

விடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா? இல்லை சறுக்குவாரா?


தனித்து களம் காணும் நாம் தமிழர் தமிழக தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கி விட்டன. தேர்தல் சித்து விளையாட்டுகளை தற்போதே மக்கள் பார்க்க தொடங்கி விட்டனர். கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக ஓயாது பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. சில கூட்டணி மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. சில கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த முறையும் தனித்தே போட்டியிட போகிறோம் என்று கெத்தாக அறிவித்து இருக்கிறது நாம் தமிழர் கட்சி.

செயல்பாடுகள் என்ன? தொடர்ந்து தேர்தலிகளில் தனித்தே களம்கண்டு ஏமாற்றத்துடன் திரும்பும் நாம் தமிழர் கட்சி இந்த முறை சாதிக்குமா? இதுவரை அக்கட்சியின் செயல்பாடுகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். 2009-ம் ஆண்டு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பை, 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார் சீமான். தமிழர், தமிழகத்தில் தமிழர்தான் ஆட்சி செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த சீமானின் உணர்ச்சிகரமான பேச்சுக்களால் நாம் தமிழர் பக்கம் ஏராளாமான தம்பிமார்கள், தங்கைமார்கள் அணிவகுக்க தொடங்கினார்கள்.

முதல் தேர்தல் எப்படி? சீமானின் உணர்ச்சிமிக்க கூட்டத்துக்கு புதிய தலைமுறையினர் திரள்வது கண்டு பெரிய கட்சிகளான அதிமுக, திமுக கொஞ்சம் ஆடித்தான் போனது என்றே சொல்ல வேண்டும். 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடாமல் ஜகா வாங்கியது நாம் தமிழர். கட்சி தொடங்கி 6 ஆண்டுகள் கழித்து 2016 சட்டமன்ற தேர்தலை முதன் முறையாக சந்தித்தார் சீமான். அந்த தேர்தலில் எதிர்பார்த்த வரேவேற்பு அக்கட்சிக்கு இல்லை. 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகள் பெற்று 1.07% வாக்குகளுடன் 9-ம் இடத்தில்தான் நாம் தமிழரால் வர முடிந்தது.

அதிகரித்த வாக்கு வங்கி இதில் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காவிட்டாலும் பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியது; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பளித்தது, திருநங்கையை வேட்பாளராக அறிவித்தது ஆகிய சீமான் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டினார்கள். தொடர்ந்து 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொண்டது நாம் தமிழர் கட்சி. இதுவரை எந்த கட்சியும் செய்யாத வரலாற்று நிகழ்

வாக மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் பெண்களைச் சரிசமமாக வேட்பாளர்களாக நிறுத்தினார் சீமான். நாம் தமிழர் மீது புதிய தலைமுறையினர் கொண்டிருந்த ஆர்வம் இந்த தேர்தலில் நன்றாக தெரிந்தது.38 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் 16,45,185 வாக்குகள் அறுவடை செய்து வாக்கு சதவிகிதத்தை 1.07 லிருந்து 3.87 ஆக உயர்த்தி காட்டியது.