விராட் அடிச்சுதான் ஆடணும்... தட்டிக்கிட்டு இருக்கக்கூடாது... முன்னாள் வீரரின் அட்வைஸ்

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது ஆர்சிபி. இந்த போட்டியில் 12 ரன்களை அடித்து அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் கேப்டன்ஷிப்பை சிறப்பாக மேற்கொண்டு வெற்றியை சாத்தியப்படுத்தினார் விராட் கோலி.

விராட் அடிச்சுதான் ஆடணும்... தட்டிக்கிட்டு இருக்கக்கூடாது... முன்னாள் வீரரின் அட்வைஸ்

ஆனால் விராட் கோலியிடம் ரசிகர்கள் அதிகமான ரன்களை எதிர்பார்ப்பதாக முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

23வது போட்டி ஐபிஎல் 2021 தொடரின் 23வது போட்டியில் நேற்றைய தினம் விளையாடிய ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி 12 ரன்களை மட்டுமே அடித்து அவுட்டானார். இந்த ஐபிஎல்லில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் அவர் 3 போட்டிகளில் சொதப்பியுள்ளார்.

163 ரன்கள் மற்ற 3 போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட சிறப்பாக விளையாடியுள்ள கோலி, 163 ரன்களை 6 போட்டிகளிலும் சேர்த்து அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் டீ வில்லியர்ஸ் ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் அவரது போட்டி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னேற்றும் கட்டாயம் மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே நிலையற்ற ஆட்டத்தை அளித்துவரும் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தை முன்னேற்ற வேண்டிய கட்டாயம் குறித்து கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். அவர் விரைவில் தன்னுடைய பார்மிற்கு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு கோலி தன்னை குறித்த சிறப்பான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் ஒவ்வொரு முறை விளையாட வரும்போதும் அவரிடம் அதிகமான ரன்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் சிங்கிள் ரன்களை அடிப்பதை காட்டிலும் அடித்து ஆடுவதையே அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.