பி.எஸ்.பி.பி விவகாரம் ஆசிரியரின் தவறுக்கு பள்ளி நிர்வாகம் மீது குற்றம்சாட்டுவதா? எல்.முருகன் ஆவேசம்

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது.இதே போல் அரசு பள்ளியில் ஒரு குற்றச்சாட்டு

பி.எஸ்.பி.பி விவகாரம் ஆசிரியரின் தவறுக்கு பள்ளி நிர்வாகம் மீது குற்றம்சாட்டுவதா? எல்.முருகன் ஆவேசம்

சென்னை: பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். 

இது தொடர்பாக சென்னையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர் சேகர்பாபு பேசியது தவறு. ஓட்டுப் போட்டவர்கள், போடாதவர்கள் என அனைவருக்கும் அரசு சேவை செய்ய வேண்டும்.

கொரோனா பரவ அரசுதான் காரணம் 
சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பரவலுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம் ஒரே நாளில் அனைத்து கடைகளும் திறந்து விட்டு பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி இங்கு பரவிய நோய் தொற்றினை பிற மாவட்டங்களிலும் தமிழக அரசு பரவ செய்து விட்டது.

சரியாக பயன்படுத்தவில்லை 
சென்னைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ஏன் பிற மாவட்டங்களுக்கு கொடுக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை. ஆனாலும் மத்திய அரசு மாநில அரசுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கி வருகிறது..கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொண்டு வரப்படும் போது அதனை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் இன்று தடுப்பூசி பற்றாக்குறை என விமர்சனம் செய்கிறார்கள்.

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது.இதே போல் அரசு பள்ளியில் ஒரு குற்றச்சாட்டு எழும் பொழுது அந்த குற்றச்சாட்டிற்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு ஏற்பாரா? புதிய வேளாண் சட்டத்தினை விவசாயிகள் பலரும் ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு தலையீடு இருக்க கூடாது 
புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் கல்வி செயலாளர்களுக்கான கூட்டமாகும். அதில் எப்படி மாநில அமைச்சரை அழைக்க முடியும்? அறநிலையத்துறை செயல்முறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எப்படி கிறிஸ்தவ, இஸ்லாம் கோவில்களில் அரசு தலையீடு இல்லாமல் இருக்கிறதோ அதேபோல் அரசு தலையீடு இருக்கக்கூடாது. மேற்கு வங்கத்தில் பட்டியலின மக்கள் கொல்லப்பட்டதற்கு இங்குள்ள ஒருவர் கூட ஏன் குரல் கொடுக்கவில்லை? லட்சத்தீவு மற்றும் மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது? என்று தெரியாமல் யாரும் பேச வேண்டாம். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.