பீஸ்ட் ரிலீஸ் தேதியில் மாற்றம். வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் படம் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

பீஸ்ட் ரிலீஸ் தேதியில் மாற்றம். வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

பீஸ்ட் படம் அமெரிக்காவில் ஏப்ரல் 12 ஆம் தேதியே வெளியாகவுள்ளது

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

படத்திலிருந்து கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் வெளியாகி செம வைரலானதை அடுத்து கடந்த வாரம் ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியானது. இவ்விரு பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதை காட்டிலும் யூடியூபில் பல சாதனைகளை செய்துள்ளது.

இந்நிலையில் படம் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை கேட்டு படக்குழுவிடம் கோரிக்கை வாய்த்த நிலையில் நாளை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

எனவே ஒரு நாள் முன்னதாகவே பீஸ்ட் படம் அமெரிக்காவில் வெளியாகவுள்ளதால் இங்கு பாம் வெளியாகவதற்கு முன்பே படத்தின் விமர்சனம் வெளியாகிவிடும்.இந்நிலையில் தீவிரவாத கும்பல்களிடம் மாட்டிக்கொள்ளும் மக்களை விஜய் எப்படி காப்பாத்துகிறார் என்பதுதான் பீஸ்ட் படத்தின் ஒருவரி கதையாம்.

மேலும் விஜய் படங்களிலிருந்து பீஸ்ட் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவருக்கான கமர்ஷியல் அம்சங்களுடன் சேர்த்து தான் பீஸ்ட் படத்தை உருவாகியுள்ளதாக நெல்சன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.