"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் "வாத்தி கம்மிங்"!

தற்போது கிரிக்கெட் உலகையே ஆக்கிரமித்துள்ள பாடல் என 'வாத்தி கம்மிங்' பாடலை சொல்லலாம். தினேஷ் கார்த்திக் முதல் ரஸ்ஸல் வரை அனைவரும் இந்தப் பாடலுக்குப் போட்டும் ஆட்டம் தான் இப்போது இணையத்தில் வைரல்

"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் "வாத்தி கம்மிங்"!


இப்போது இணையத்தில் எங்கு பார்த்தாலும் டிரெடிங்கில் மாஸ் காட்டுவது விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்தான். இந்தப் பாடல் வெளியாகி ஓர் ஆண்டை கடந்திருந்த போதும், பாடலின் மவுஸ் குறைந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலங்களின் வாத்தி கம்மிங் வெர்ஷன் இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது

குறிப்பாக, அனைத்து கிரிக்கெட் பிரபலங்களின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டது வாத்தி கம்மிங் பாடல். ஒவ்வொரு வீரரும் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோதான் இணையத்தில் இப்போது வைரல்

வாத்தி கம்மிங் வாத்தி கம்மிங் பாடலுக்கு தோள்பட்டையை இறக்கி விஜய் ஆடும் ஆட்டம் தான் ஹைலெட். கடந்த ஆண்டு மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழாவில் தான் முதலில் விஜய் இந்த ஸ்டெப்பை போட்டார். அப்போது முதலே இணையத்தில் இது பற்றிக்கொண்டது. வெற்றி கொண்டாட்டம், விருது வழங்கும் விழாக்கள், அவ்வளவு ஏன் பட்டமளிப்பு விழாக்களுக்கும் சென்றது வாத்தி கம்மிங் பாடல்.

தினேஷ் கார்த்திக் & கோ இந்த பாடலை முதலில் கிரிக்கெட்டிற்கு எடுத்துச் சென்றவர் நம் தினேஷ் கார்த்திக் தான். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, சையது முஷ்டாக் அலி டிராபியை இந்த ஆண்டு வென்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தை வெளிப்படும் விதமாக வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்டனர் தினேஷ் கார்த்திக் & கோ. அப்போதே இது இணையத்தில் வைரலானது.

ரவி அஷ்வின் உள்ளூர் கிரிக்கெட்டிற்கு தினேஷ் கார்த்திக் எடுத்துச் சென்றார் என்றால், சர்வதேச கிரிக்கெட்டிற்கு இந்தப் பாடலை எடுத்துச் சென்றவர் மற்றொரு தமிழக வீரரான அஷ்வின். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது அஷ்வின், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து ஆடிய வாத்தி கம்மிங் சர்வதேச அளவில் ஹிட் அடித்தது. அப்போது முதலே பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு அடிமையாகிவிட்டனர்.