விருகம்பாக்கம் வீட்டில் நடிகர் விவேக்கின் உடல்.. மாலை இறுதிச்சடங்கு.. பிரபலங்கள் ரசிகர்கள் அஞ்சலி!

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விருகம்பாக்கம் வீட்டில் நடிகர் விவேக்கின் உடல்.. மாலை இறுதிச்சடங்கு.. பிரபலங்கள் ரசிகர்கள் அஞ்சலி!


இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.

விருகம்பாக்கம் வீட்டில் இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக

இன்று மாலை தகனம் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு விருகம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலச்சந்தர் மூலம் நடிகர் விவேக் 1961ஆம் ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பை ஊரணி கிராமத்தில் பிறந்தார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தாராள பிரபு நடிகர் விவேக்கின் கலைப்பயண சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. விவேக்கின் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு தாராள பிரபு படம் வெளியானது. இந்தப் படத்தில் விவேக் மருத்துவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்