மஹாராஷ்டிராவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மும்பையில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. "மயான அமைதி".. பெருத்த மெளனம் காக்கும் மக்கள்.. மாறும் "தலையெழுத்து".. யார் மனசுல யாரு!

புயல் வேகப் பிரசாரம் முடிந்து விட்ட நிலையில் பெருத்த அமைதி காக்கிறது தமிழகம். வாக்காளர்கள் நாளை என்ன முடிவு எடுக்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சிகளும் பதட்டமாகவே உள்ளன. இந்த தேர்தல் யாருக்கு முக்கியம் என்று திட்டமிட்டு சொல்ல முடியவில்லை.. ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி அரசு போராடி வருகிறது.. ஆட்சியை பிடிக்க திமுக தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் எதிரெதிர் நிற்கின்றன. மறுபக்கம் நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் தனி அணிகளாக களம் கண்டுள்ளன.

மஹாராஷ்டிராவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மும்பையில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. "மயான அமைதி".. பெருத்த மெளனம் காக்கும் மக்கள்.. மாறும் "தலையெழுத்து".. யார் மனசுல யாரு!


அதிமுக திமுகவை எடுத்து கொண்டால், கடந்த முறையே நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட ஆதங்கம் நிரம்பி கிடக்கிறது.. அதனால்தான், இந்த முறை பார்த்து பார்த்து கூட்டணி + சீட் பேசப்பட்டது.. 3 மாத காலமாக திமுக கூட்டணி குறித்து எத்தனையோ சலசலப்புகள் வந்தாலும், கடைசியில் ஒருத்தரையும் கூட்டணியை போகாமல் அதேசமயம், புதிதாக வேறு சில கட்சிகளை இணைத்து கொண்டு ஸ்டாலின் களம் காணுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தினகரன் இன்னொரு பக்கம் அமமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் களம் கண்டுள்ளது. இந்த முறை ஐந்து முனை போட்டியை கட்சிகள் கண்டுள்ளன. இதனால் பெருமளவில் வாக்குகள் பிரியும் என்ற பேச்சும் உள்ளது. கடந்த பல நாட்களாக தமிழகம் முழுவதும் சூடு பறக்க தேர்தல் பிரச்சாரம் நடந்து வந்தது. நேற்று மாலையுடன் அது ஓய்ந்து விட்டது.

ஆர்வம் மக்கள் இந்தப் பிரச்சாரத்தை ரொம்பவே ர சித்துப் பார்த்தனர். காரணம் இதுவரை இல்லாத சுவாரஸ்யத்துடன் கூடியதாக இந்த பிரச்சாரம் இருந்ததால். ஒவ்வொரு கட்சியும் டிசைன் டிசைனாக மக்களைக் கவர முயற்சித்தது மொத்த மாநிலமும் ஆர்வத்துடன் பார்த்தது.

வாக்காளர்கள் எல்லா கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரமும் நேற்று முடிந்துவிட்ட நிலையில், இன்று எந்த வகையிலான பிரசார நடவடிக்கையிலோ, ஓட்டு கேட்டு வாக்காளர்களை ஈர்க்கும் வகையிலோ, வேட்பாளர்களோ அல்லது கட்சியினரோ ஈடுபடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ள நிலையில், வாக்காளர்களிடம் ஒரு அமைதி சூழ்ந்துள்ளது.. வாக்காளர்களின் இந்த அமைதியான மனநிலையை தங்கள் ஓட்டுக்கான ஆயுதமாக்குவதற்கான முழு பிரசாரத்தையும் சில கட்சியினர் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.